தக்க தருணத்தில் காய்களை நகர்த்தி சிறிலங்காவில் கால் பதித்த இந்தியா!

0
99

இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நேரத்தில் தனது காய்களை சரியாக நகர்த்தியிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் அந்திய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துவிட்டது. குறிப்பாக டொலர் நெருக்கடியினால் இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்களின் விலை உயர்வு உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது.

மறுபுறத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய துயரத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடன் மேல் கடனாக உலக நாடுகளில் இலங்கை பெற்றுவிட்டது.