சுற்றுலா விடுதியின் கழிப்பறை குழியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

0
60

பாணந்துறை – பின்வத்த பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் கழிப்பறை குழியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று (29) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விடுதி உரிமையாளரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விடுதியின் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் கடவத்தையில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றில் பணிபுரிந்துவந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடுதியின் ஊழியர்கள் குழுவொன்று கடந்த 25ஆம் திகதி மேற்படி பெண் பணிபுரியும் களியாட்ட விடுதிக்கு சென்று அவரை சந்தித்துள்ளதாகவும் பின்னர் அப்பெண்ணை பின்வத்த பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.