கேஜிஎப் இயக்குனர் தீவிர விஜய் ரசிகரா? இது தெரியுமா..

0
72

கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக மாறி இருக்கிறது கேஜிஎப். அதன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

கேஜிஎப் 2 ட்ரெய்லர் சாதனை

சில தினங்கள் முன்பு வெளிவந்த கேஜிஎப் 2 ட்ரெய்லர் மிகப்பெரிய ஹிட் ஆகி பல மில்லியன் பார்வைகளை அள்ளி இருக்கிறது. குறிப்பாக ஹிந்தியில் ட்ரெய்லருக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

தமிழில் பீஸ்ட் வெளியாகி மறுநாளே இந்த படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் பீஸ்ட் படத்திற்குள் கேஜிஎப் 2 படத்திற்கும் பாக்ஸ் ஆபிசில் பெரிய மோதல் இருக்கும் என தெரிகிறது.

கேஜிஎப் இயக்குனர் விஜய் ரசிகரா?

கேஜிஎப் 2 பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் யாஷ் பேசும்போது ‘விஜய் எனக்கு சீனியர், இது மோதல் இல்லை’ என கூறி இருந்தார்.

மேலும் அந்த படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் விஜய்யின் தீவிர ரசிகர் என தற்போது சமூக வலைத்தளங்களில் பேச்சு எழுந்திருக்கிறது. அவர் விஜய் பற்றி பதிவிட்ட பழைய ட்விட்களை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.