காமெடி நடிகர் வையாபுரிக்கு இவ்வளவு பெரிய மகன், மகள் இருக்கிறார்களா?

0
73

சின்னமருது பெரியமருது, மால்குடி டேஸ் போன்ற தொடர்கள் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானவர் வையாபுரி.

வையாபுரி பயணம்

அதன் பிறகு இவர் 1995ம் ஆண்டு செல்லகன்னு என்ற படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த வாய்ப்பின் மூலம் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் படங்கள் என 250க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி ரோலில் நடித்திருக்கிறார்.

இடையில் அதிகம் படங்கள் நடிக்காத அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்களின் மனதை கவர்ந்தார். அந்நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேட்டிகள் கொடுத்த அவர் படங்கள் அவ்வளவாக கமிட்டாகவில்லை.

குடும்ப வாழ்க்கை

ஆனந்தி என்பவரை திருமணம் செய்துகொண்ட வையாபுரிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள்.

மகளின் திறமை

வையாபுரி மகள் ஷிவானிக்கு ஓவியத்தின் மீது அதிக ஆர்வம் உள்ளதாம். அதற்காக அவர் பல பயிற்சிகள் எடுத்திருக்கிறாராம். மகள் பயிற்சி பெற்ற இன்ஸ்டிட்யூட்டில் வருடந்தோறும் பெயின்டிங் கண்காட்சி வைப்பார்கள். அதில் என் பெண் ஒரு இயற்கை காட் பெயின்டிங் வைத்திருந்தாள். அது மிகவும் அருமையாக இருந்ததாக பலரும் பாராட்டினார்கள் என்று ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.