கனடாவை விட்டு வெளியேறி வேறொரு நாட்டுக்குச் செல்ல விரும்பும் இளம் புலம்பெயர்ந்தோர்

0
77

கனடா புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் நாடு என பெயர் பெற்ற ஒரு நாடு என்பது பலரும் அறிந்த ஒரு விடயம்.

ஆனால், கனடாவுக்கு புலம்பெயர்ந்துள்ள இளம் புலம்பெயர்ந்தோர் பலர், கனடாவை விட்டு வெளியேறி வேறொரு நாட்டுக்குச் செல்ல விரும்புவதாக ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, நாட்டின் தலைமை மீது நம்பிக்கையின்மை மற்றும் அதிக விலைவாசி காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆய்வில் வெளியாகியுள்ள அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் சில:

  1.  புதிதாக கனேடிய குடியுரிமை பெற்றவர்களில், 18 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 30 சதவிகிதம் பேரும், பட்டப்படிப்பு முடித்த இளம் புலம்பெயர்ந்தோரில் 23 சதவிகிதத்தினரும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தாங்கள் வேறொரு நாட்டுக்கு குடிபெயர விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.
  2. பெரும்பாலான கனேடியர்களும் புதிதாக புலம்பெயர்ந்தவர்களும் கனடா நல்ல வாழ்க்கைத்தரத்தை அளிப்பதாக நம்பினாலும், புதிதாக புலம்பெயர்ந்தவர்களை விட, கனேடியர்கள் கனடாவின் புலம்பெயர்தல் கொள்கைகள் குறித்து நேர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள்.
  3. ஆனால், புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் விலைவாசி உயர்வு குறித்து கனடா புரிந்துகொள்ளவில்லை என்று கருதுவதால், கனடாவில் தொடர்ந்து வாழ விரும்பாத ஒரு நிலை புலம்பெயர்ந்தோருக்கு ஏற்படுவதாக புதிதாக புலம்பெயர்ந்தோர் கருதுகிறார்கள்.
  4. பட்டப்படிப்பு முடித்த இளம் புலம்பெயர்ந்தோரோ, தாங்கள் அதிகம் கற்றிருந்தும், தங்களுக்கு, பட்டப்படிப்பு படிக்காத மற்ற புலம்பெயர்ந்தோரை விட சிறந்த பணியோ, உயர்ந்த ஊதியமோ கிடைக்காதது நியாயமில்லை என கருதுகிறார்கள்.