கனடாவில் அடர்ந்த காட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!

0
70

கனடாவில் மரங்கள் அடர்ந்த காட்டு பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Langley நகரில் 7400 block of 200 Street அருகே உள்ள மரங்கள் அடர்ந்த காட்டு பகுதியில் நேற்று ஆண் ஒருவரின் சடலத்தை பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரிக்க ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு அழைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இது கொலை வழக்காக விசாரிக்கப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடக்கும் காரணத்தால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.