கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள பிரபாஸின் ராதே ஷியாம் படம்

0
83

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்க இம்மாதம் வெளியான திரைப்படம் ராதே ஷ்யாம்.

படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் சரியான வரவேற்பு பெறவில்லை. அதற்குள் The Kashmir Files என்ற திரைப்படமும் வெளியாக பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கியது.

படத்தின் வசூல்

ஆந்திரா-தெலுங்கானாவில் ரூ. 54.11 கோடியும் கர்நாடகாவில் ரூ. 7.65 கோடியும் வசூலிததிருக்கிறது. ஹிந்தி பதிப்பில் ரூ. 10.50 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 12.50 கோடியும் வசூல் வந்துள்ளது.

உலகம் முழுவதுமே படம் மொத்தமாக ரூ. 140 கோடி தான் வசூல் என்கின்றனர்.

படு நஷ்டம்

300ல் இருந்து 350 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 120 கோடிக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளதாம். பெரிய பட்ஜெட்டில் தயாராகி நஷ்டத்தை சந்தித்துள்ள படமாக அமைந்துவிட்டது பிரபாஸின் ராதே ஷியாம்.