ஏகமனதாக கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார் செந்தில் தொண்டமான்!

0
67

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தவிசாளராக நிதிச் செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரனும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் கொட்டக்கலை சி.எல்.எஃப் வளாகத்தில் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது.  கட்சியின் முன்னாள் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்ததையடுத்து, கட்சியின் புதிய தலைவர் தெரிவு கடந்த 2 வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்து.

இந்தநிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் இடம்பெற்ற போது புதிய தலைவர் தெரிவிற்கு மருதபாண்டி ரமேஸ்வரன் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதனையடுத்து புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் பிரதி தலைவராக கணபதி கனகராஜூ, தேசிய அமைப்பாளராக ஏ.பி. சக்திவேலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் தெரிவு இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.