எரிபொருள் நெருக்கடியால் இணைய சேவைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்

0
58

இலங்கையில் நீண்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படுவதால், இணைய சேவைகளை வழங்குவதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் இன்மையால் 3G மற்றும் 4G வலையமைப்பில் குறுக்கீடு குறைப்பு அமைப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொலைபேசி கோபுரங்களின் ஜெனரேட்டர்களுக்கான டீசல் வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்படும் போது தொலைபேசி கோபுரங்களில் அவற்றின் 3G மற்றும் 4G குறுக்கீடு குறைப்பு அமைப்புகள் செயலிழக்கப்படும்.

இதன் காரணமாக இணைய தரவுகள் பரிமாற்றும் வேகம் குறைவடையவுள்ளது. பொதுவாக டீசல் ஜெனரேட்டர்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டாலும், அதிக மின்சாரம் தேவைப்படுவதால், அவற்றை இயக்குவதற்கு backup பட்டரி சக்தி போதுமானதாக இல்லாததால், இதற்கான டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இணைய வேக குறைப்பினால் சாதாரண அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்ற சேவைகள் தற்போது ஒரு பிரச்சனையாக இல்லை.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 மணிநேரம் வரை மின்சாரம் வழங்கும் அதே வேளையில், தொலைபேசி கோபுரங்களை இயக்குவதற்கு அவற்றின் Backup பட்டரி சக்தி போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.