உறுதி மொழியை மீறி ரஷ்ய படையினர் குடியிருப்புக்கள் மீது தாக்குதல்! பல பேர் பலி!

0
119

உக்ரைனில் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யப் படைகள், கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் நகரமான லிசிசான்ஸ்க் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி எறிகனை தாக்குதல்களை நடத்தியதாக இன்டர்ஃபெக்ஸ் உக்ரைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று உள்ளூர் நேரப்படி காலை 6:30 மணியளவில் இந்த தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன. இதன்போது உயரமான கட்டிடங்கள் கணிசமாக அழிக்கப்பட்டுள்ளன

அத்துடன் உயிர் இழப்புகளும் பதிவாகியுள்ளன எனினும் நிறைய இடிபாடுகள் ஏற்பட்டுள்ளமையால் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை பெறமுடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை துருக்கியில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் வழங்கிய உறுதிமொழிகளுக்கு மாறாக ரஷ்ய படையினர் செனிகிவ் நகரத்தின் பல குடியிருப்புப் பகுதிகளில் மனிதாபிமானமற்ற பீரங்கித் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

இதன்போது பலர் கொல்லப்பட்டதுடன் சுமார் 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.