இலங்கையின் நிலை மோசம்- வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறையை அமுல்படுத்துமாறு கோரிக்கை

0
63
Group of businessmen and businesswomen smart working from home. View from side of woman talking to her colleagues about business plan over a video conference.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் மின்சாரத்தை சேமிக்க அரசாங்க ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறையை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு நீர் மற்றும் எரிபொருளின் பற்றாக்குறையினால் நாளாந்த மின்வெட்டை குறைப்பதற்கான வழிமுறையொன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க முன் வைத்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்தினால் தினசரி மின்வெட்டை இன்னும் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார தடை ஏற்படும் காலப்பகுதியினுள் அலுவலக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஜெனரேட்டர்களை பயன்படுத்த நேரிடும். அதற்காக பயன்படுத்தப்படும் டீசல் மற்றும் தினசரி போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் டீசல் அளவை குறைப்பதன் மூலம் அந்த டீசலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.