இன்றைய ராசிபலன் {30 மார்ச் 2022}

0
79

மேஷம்

மேஷ ராசிக்கு மிகவும் சிறப்பான பலன் தரக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எடுத்த இலக்கு, வேலைகள் சிறப்பாக நிறைவேறும்.
நீங்கள் ஈடுபட்டிருக்கும் தொழில், வியாபாரம், உத்தியோகம் என எதுவாக இருந்தாலும் அதில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தம்பதியிடையே நல்ல அன்பும், நெருக்கமும் இருக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம், தன வரவு பல்வேறு வழிகளில் கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசியினரின் கனவு, விருப்பங்கள் நிறைவேறக்கூடிய நாளாக அமையும். உங்கள் மனதில் நம்பிக்கை அதிகரிப்பதோடு, தைரியமாக எதையும் செய்வீர்கள்.

தொழில், உத்தியோகம் என எப்பேர்ப்பட்ட சூழலாக இருந்தாலும் அத்ஹு சாதகமாக இருப்பதோடு, அதில் வளர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் நன்றாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

மிதுனம்

மிதுன ராசி கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாளக இருக்கும். எளிதாக முடிக்க வேண்டிய வேலைகளை முடிக்க போராட வேண்டியிருக்கும். குறிப்பாக தொழில், உத்தியோகத்தில் நினைத்த இலக்கை அடைய சிரமமும், பணிச்சுமையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இருப்பினும் கடினமான சூழலைச் சமாளித்து நல்ல வெற்றி அடைவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்க விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். உறவுக்குள் குழப்பமான மனநிலை காணப்படும். செலவு அதிகரிக்கும் என்பதால் கவனமுடன் பணத்தை கையாளவும்.

கடகம்

கடக ராசிக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. எதையும் எளிதாக நினைத்து இறங்க வேண்டாம். பணிச்சுமை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களும், அலைச்சலும் அதிகரிக்கலாம்.

இன்று வேலையில் இலக்கை எளிதாக எட்ட சரியான திட்டமிடலுடன் இன்று வேலையை தொடங்கவும். பணியிடத்தில் சகபணியாளர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும்.
குடும்பத்தில் சலசலப்பு இருக்கும். பேச்சு, செயலில் கவனம் தேவை. நிதானமான செயல்பாடு வெற்றியைத் தரும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், விரய செலவை செய்வதையும் தவிர்ப்பது அவசியம்.

சிம்மம்

அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனம் தேவை. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாகும். வெளிநாடுகளில் வசித்து கொண்டு இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம் இருப்பினும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

வேலை வாய்ப்பை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும் பற்றாக்குறை இருந்து வரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வயதானவர்களுக்கு கண் மற்றும் கால் தொடர்பான பிரச்சினைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். பொறுமையைக் கைக் கொள்வது மிக முக்கியமானது பேச்சில் நிதானம் தேவை.

கன்னி

அன்பர்களுக்கு இன்றைய நாட்டு மிகச்சிறந்த நாள் உத்தியோகத்திலிருப்பவர்கள் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம் அதற்கான அடித்தளங்கள் இன்று அமையும் பெண்களுக்கு நன்மை தரக்கூடிய நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும்.

பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.

வழக்கு மற்றும் பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

துலாம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை பொருளாதாரத்தில் பற்றாக்குறைகளை விரைவில் சரி செய்து விடுவீர்கள் கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும்.

காதல் தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான பல நிகழ்வுகள் உண்டு திருமணத்தைப் பற்றிய சிந்தனைகள் மேலோங்கி நிற்கும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சொத்துக்கள் வாங்குவது மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகளை ஈடுபடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மையாவார்கள் சொந்த தொழில் முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும் சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும் நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த தன வரவு உண்டாகும் தொழில் முன்னேற்றத்திற்காக கடன் கிடைக்கும்.

விருச்சிகம் 

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி உறவு சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் இறுதியில் ஒற்றுமை நன்றாக இருந்து வரும் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெளியூர் வேலை வாய்ப்பு போன்றவற்றை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

சிலர் வீடு கட்டுவது வீட்டை மராமத்து செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவதற்குத் திட்டம் இடுவதற்கான நல்ல நாள் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் திறம்பட அவற்றை எதிர்கொண்டு நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள்.

தனுசு

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை ஒரு சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனைகளை ஏற்படும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் இடத்தில் ஏற்படுவதற்கான நாள் ஆகும் அது தொடர்பான காரியங்களை இன்று துவக்கலாம்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் வெற்றிகரமாக கல்வியைத் தொடர்வார்கள்.

கல்வி முடிந்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் விசா தொடர்பான காரியங்களில் வெற்றி உண்டாகும் பொருளாதாரத்தில் முன்னேற்ற பாதையை நோக்கி பல நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த வேலைகளை இன்று வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும்.

மகரம் 

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும் குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் சற்று அனுசரித்துச் செல்ல வேண்டும் பொருளாதாரத்தில் ஓரளவுக்கு பற்றாக்குறை இருந்தாலும் எளிதில் சரி செய்து விடுவீர்கள்.

வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.

தொழில் கல்வி மருத்துவ கல்வி போன்றவற்றில் இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கிடைக்கும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.

கும்பம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு ஒரு சில நாட்கள் கால தாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமண காரியங்கள் கைகூடும்.

சுப காரியங்களில் வெற்றி கிடைக்கும் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை துவக்குவதற்கு நல்ல நாள் ஆகும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும்.

குடும்பத்தில் உங்கள் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளின் அனுசரணையும் ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த தனவரவு உண்டாகும் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

மீனம் 

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் நன்மை உண்டாகும் பொருளாதாரத்தில் பற்றாக்குறை சற்றுக் இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும்.

உணவு தொழில் சுற்றுலா தொழில் மற்றும் சேவை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ற வருமானத்தை கொடுத்துவிடும் பெண்களுக்கு இனிமையான நாளாகும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும்.

புதிய தொழில் பற்றிய சிந்தனைகள் மனதில் மேலோங்கி நிற்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள் சற்று பணிச்சுமையும் கூடுதலாகத்தான் இருக்கும் மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.