அரச நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இரு நாட்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு பரிந்துரை !

0
77

அரச நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இன்று (30) மற்றும் நாளை (31) வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைக்குச் செல்லுமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் சில நாட்கள் மக்கள் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இந்த நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. இதற்கு தீர்வு காண எந்த நிறுவனமும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நிதி நெருக்கடியால் இந்த மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இன்று மற்றும் நாளை, அரசாங்க நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் இந்த சூழ்நிலையை நிர்வகிக்க நாங்கள் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தோம்.

சுதந்திர வர்த்தக வலயங்களுக்கு மின்சாரம் வழங்கவும் நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.