16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரும் லைலா!

0
90

90 காலகட்டத்தில் தமிழக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாயகிகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் கன்னத்து குழியழகி லைலா. 

அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்திருக்கிறார், ஆனால் விஜய்யுடன் மட்டும் அவர் நடிக்கவில்லை.

கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானாலும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான விஜய்யுடன் மட்டும் இவர் ஜோடி போட்டு நடிக்கவே இல்லை.

உன்னை நினைத்து படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறி சூர்யா நடித்தார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார்.

கடைசியாக 2006ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திருப்பதி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

பிறகு பட வாய்ப்புகள் குறைய அவர் 2006ம் ஆண்டே 8 ஆண்டுகளாக காதலித்து வந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மும்பையில் செட்டில் ஆன லைலாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். 

இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இப்போது சர்தார் என்ற படத்தை இயக்குகிறார். இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்து வர அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்கிறார்.

தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வருகிறார் நடிகை லைலா.