யாழ். ஆவரங்கால் பகுதியில் கோர விபத்து!

0
69

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிள்களை எதிரே உள்ள பாலத்தினுள் மோதித் தள்ளியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் ஒரு மோட்டார் சைக்கிள் பட்டா வாகனத்துடன் சேர்ந்து பாலத்தினுள் சென்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் பட்டா வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் இரண்டும் சேதமடைந்துள்ளன.

மோட்டார் சைக்கிளுடன் நின்றவர்கள் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பட்டா ரக வாகன சாரதியின் கவனக்குறைவால் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.