பேருந்து ஒன்று பாலத்துடன் மோதியதில் இரண்டு பேர்க்கு நேர்ந்த நிலை

0
68

கிளிநொச்சி – முரசுமோட்டை A35 வீதியில் பேருந்து ஒன்று பாலத்துடன் மோதியதில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் மற்றொருவர் தருமபுரம் வைத்தியசாலையிலும் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று (28) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தருமபுரத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற அரசுப்பேருந்து முரசுமோட்டை பகுதியில் செல்லும்பொது அங்குள்ள பாலத்துடன் மோதியதில் குறித்த பேருந்தானது விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.