நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற தங்கத்தின் விலை!

0
65

இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அதன்படி விற்பனைச் சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை இன்று பிற்பகல் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தொடர்ந்தும் டொலரின் பெறுமதி அதிகரித்து வருவது மற்றும் தங்கத்தை இறக்குமதி செய்ய டொலர் இல்லாமை போன்றன இவ்வாறான நிலைமைக்கு காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.