தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ரணிலுடன் இணக்கத்தை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

0
56

நாட்டின் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்க்கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்ததாக தெரியவருகிறது.

இது சம்பந்தமாக கடந்த சில வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இவர்கள் இருவரும் அவ்வப்போது கலந்துக்கொண்டு வந்துள்ளனர்.

எனினும் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளதை அடுத்து, இவர்கள் இருவரும் இணைந்து அனைவரும் ஒன்றுப்பட்டு நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனக் கூறி வருவதாக தெரியவருகிறது.

எதிர்க்கட்சியை சேர்ந்த இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அடிக்கடி கட்சி மாறுவதில் பிரபலமானவர் என கூறப்படுகிறது.