கராத்தே போட்டியில் பதக்கங்களை பெற்று வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகள்

0
78

கராத்தே போட்டியில் வவுனியா வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நிப்பொன் கராத்தே சாம்பியன்ஷிப் – 2022 (NIPPON KARATE CHAMPIONSHIP – 2022) கராத்தே போட்டிகள் பண்டாரகமவிலுள்ள விளையாட்டு திடலில் நேற்றைய தினம் (27) சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இப்போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்தி வவுனியாவை சேர்ந்த மார்ட்டியல் ஆர்ட்ஸ் கழகத்தின் (DINESH MARTIALARTS SCHOOL) வீராங்கனைகள் பங்குபற்றி பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்று வவுனியா மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த வீராங்கனைகளிற்கு T.p.தினேஷ், G. ஜீவன் ஆகியோர் பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.