ஒரு பதிவிற்காக லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தா ! இன்ஸ்டாகிராமின் பின்னணி..

0
73

தென்னிந்தியா அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா, தற்போது இவர் பாலிவுட்டிலும் பிரபலமாகியுள்ளார்.

தமிழில் அடுத்து இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகவுள்ளது, மேலும் தெலுங்கில் புராண திரைப்படமாக உருவாகி வரும் சகுந்தலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.

இந்நிலையில் நடிகைகளில் பெரியளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகை சமந்தா. இவரின் இன்ஸ்டாகிராமை பின்தொடரும் ரசிகர்கள் மட்டும் 2 கோடிக்கும் அதிகமாக உள்ளனர்.  

மேலும் சமந்தா அவரின் இன்ஸ்டாவில் பதிவிடும் ஒரு விளம்பர பதிவிற்கு 15 முதல் 20 லட்சம் வரை வாங்குகிறாராம்.

முன்பு 8 முதல் 10 லட்சம் வரை வாங்கிவந்த சமந்தா ஹிந்தியிலும் பிரபலமாகியுள்ளதால், அவரின் விளம்பர கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுளளது.