இன்றைய ராசிபலன் {29 மார்ச் 2022}

0
92

மேஷம் 

இன்று பேச்சிலும், செயலிலும் சற்று நிதானமாக செயல்பட நல்ல பலனைப் பெறலாம். பண வரவு சிறப்பாக இருக்கும் என்பதால் உங்கள் பிரச்னைகள் குறையும் என்றாலும், உடன் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும் என்ற நிலை உள்ளதால் எந்த செயலிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது.

குடும்பத்தில் தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழில் ரீதியாக பார்க்கின்ற போது சிறிய பிரச்னைகள் இருக்கும். நீங்கள் சற்று நிதானமாகச் செயல்பட யோகமான பலன்களைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை இருக்கும்.அதிகாரிகளுடன் பேசும் போது சற்று கனிவாக பேசுவது நல்லது.

ரிஷபம்

உங்களுக்கு அலைச்சல்கள் இருந்தாலும், அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பண வரவுகள் சாதகமாக இருப்பதால் உங்களின் தேவைகள் நிறைவேற்றிக் கொள்வீர்கள். பேச்சிலும், செயலிலும் சற்று பொறுமையாக இருப்பது நல்லது. குறிப்பாக முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

குடும்பத்தில் சற்று விட்டுக் கொடுத்து செல்வது மிக சிறப்பும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. தொழில் ரீதியாக சாதகமான பலன்கள் அடையக்கூடிய நிலை இருந்தாலும், கூட்டாளிகளைச் சமாளித்துச் செல்வது மிக மிக அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் சாதகமான பலன் கிடைக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

மிதுனம்

பேச்சி சற்று பொறுமையாக இருப்பது மிக மிக அவசியம். பணவரவு சிறப்பாக இருக்கும் என்றாலும், வரவுக்கு மீறிய செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்குத் தேவையற்ற பயணங்கள் ஏற்படலாம். சக நண்பர்களைச் சற்று அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம்.

தொழில் செய்பவர்கள் நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் வளமான பலனை அடையக்கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது அன்பு, அக்கறையை அதிகரிக்கும்.

கடகம் 

இன்று முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. பணவரவில் சாதகமாக இருந்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள் என்றாலும், எளிதில் முடியக்கூடிய வேலைகள் சற்று தாமதமாக வாய்ப்புள்ளது.

ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும், மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது அவசியம்.

தொழில் ரீதியாக சற்று அலைச்சல் இருந்தாலும், அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருக்கும். அதனால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது அவசியம்.

சிம்மம் 

நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகள் ஒரு வளமான பலன்களை அடைவீர்கள். உடன் இருப்பவர்கள் சாதகமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஒரு அனுகூலமான பலனை அடைவீர்கள். கடந்த காலங்களில் நிலவிய தடைகள் விலகி, ஏற்றம் மிகுந்த பலன்களை இன்றைய நாளில் பெறுவீர்கள்.

தொழிலில் புதிய யுக்தியைப் பயன்படுத்தி மேன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடிவரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். சிலருக்கு வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புண்டு.

கன்னி

உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோசமும் கிடைக்கும். தொழிலில் ஒரு வளமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருபப்வர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைப்பதால் சிறப்பான பலன் கிடைக்கும்.

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. குடும்பத்தில் கணவன், மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்ல ஒரு வளமான பலனை பெறலாம். தொழிலில் சிறு பிரச்னைகள் இருக்கும்.

துலாம் 

உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியக்கூடிய வேலைகள் கூட சற்று இழுத்தடிக்கும், கால தாமதம் ஏற்படும். எந்த செயலை செய்வதாக இருந்தாலும் சற்று சிந்தித்து, நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் ரீதியாக தேவையற்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

எதிலும் நீங்கள் முன்னின்று செயல்பட்டால் தான் நல்ல பலனைப் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகப்படியாக இருக்கும். பொதுவாக இருப்பதை அனுபவிப்பதற்குக் கூட இடையூறுகள் ஏற்படலாம்.

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாக மேன்மை அடையக்கூடிய நில இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு இருப்பதால் மேன்மையான பலன்கள் உண்டாகும். பணிச்சுமை குறைந்து மன நிம்மதி தரும்.

கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும். நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு உண்டாகும். வேலையில் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சாதகமான நாள் ஆகும்.

தனுசு 

இன்றைய நாள் இனிய நாளாக அமையும். மதிப்பும், மரியாதையும் கூடும் நாள். உடன் இருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதாக காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக ஒரு வளமான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவும், புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும்.

கணவன் மனைவி உறவு அன்புடைய ஏதாவது இருக்கும். பங்கு சந்தை போன்றவற்றில் இருப்பவர்கள் கவனம் செலுத்தவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாக வாய்ப்பு உள்ளது. சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும், திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

மகரம்

எல்லா வகையிலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். கடந்த கால சோதனைகள் விலகி ஒரு வளமான பலன்க் கிடைக்கும். ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்னைகள் விலகி எதிலும் சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

தொழிலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். நீங்கள் சற்று மன நிம்மதியுடன் இருக்கக்கூடிய வகையில் பலன்கள் கிடைக்கும்

கும்பம்

உஙக்ளுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பணப்பற்றாக்குறை இருந்தாலும், அதை எதிர் கொள்ளக்கூடிய தன வரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பது நல்லது. உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்பதால் எதையும் சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த கால பிரச்னைகள் எல்லாம் விலகி நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

மீனம்

உங்களுக்கு நிலவிய சங்கடங்கள் விலகி நிம்மதி ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக முன்னேற்றம் இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக நெருக்கடிகள் விலகி நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சில நாட்களாக இருந்த இடையூறுகளும், பணிச்சுமையும் குறையும்.

பயணங்களால் மேன்மை உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், கணவன் மனைவியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும்.