இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் ! வெளியாகிய காணொளி

0
97

இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள சித்திபேட்டை மாவட்டத்திலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

உள்ளூர் நிர்வாகம் மற்றும் கிராம செயலாளர், நாய் பிடிப்பவர்களை வேலைக்கு அமர்த்தியதாகவும், தெருநாய்களை விஷ ஊசி போட்டு கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது.

கிராமவாசி ஒருவர், மார்ச் 27 அன்று தங்களுடைய செல்லப்பிராணி இறந்தைப் பற்றி தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.