“அமெரிக்க டொலரின் பெறுமதி 450 ரூபாவை எட்டும் ” பேராசிரியர் அமந்த மெத்சில பெரேரா தெரிவிப்பு

0
79

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 450 இலங்கை ரூபாவினை எட்டுவதனை தவிர்க்க முடியாது என வயம்பல பல்கலைக்கழகத்தின் வணிகக் கல்வி பீடத்தின் பேராசிரியர் அமந்த மெத்சில பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினை குறித்து அரசாங்கத்திற்கு போதிளவு தெளிவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வகட்சி மாநாட்டின் போது மத்திய வங்கியின் ஆளுனர் சரியான பதிலை வழங்காது கடந்த அரசாங்கம், பெருந்தொற்று நிலைமை மற்றும் உக்ரேய்ன் – ரஸ்ய யுத்தம் போன்ற காரணிகளை அடுக்கிச் சென்றதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாய தருணத்தில் அரசாங்கம் அரசியல் ரீதியான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.

கடன் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அரசாங்கம் கூடுதலாக பணத்தை அச்சிட்டதாகவும் இதனால் அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வடைந்து செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலை நீடித்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க டொலரின் பெறுமதி 450 ரூபாவாக உயர்வடையும் எனவும் அதனை தடுக்க முடியாத எனவும் பேராசிரியர் பெரேரா தெரிவித்துள்ளார்.