16 வயது காதலனால் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயர்!

0
50

14 வயது மாணவியின் தகாத புகைப் படங்களை பல்வேறு நபர்களுக்கு பகிர்ந்த 16 வயது பாடசாலை மாணவனொருவனை கைது செய்ததாக மாத்தறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

மாத்தறை நகருக்கு அண்மையிலுள்ள பிரதேசமொன்றிலுள்ள பாடசாலையில் குறித்த மாணவனும் மாணவியும் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு ஆன்லைனில் கல்வி பெறும் வாட்ஸ்அப் குழுவில் சந்தேகநபர் உள்நுழைந்து மாணவியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பின்னர் மாணவியை தகாத புகைப் படங்களை அனுப்பி வைக்கும்படி கூறி அவற்றைப் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் வாட்ஸ்அப் குழுவில் உள்ள சகலருக்கும் மாணவியின் தகாத புகைப்படங்களை பார்க்கக் கூடியதாக இருந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து அறிந்த மாணவி மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும், அதன் பின்னர் மாணவி வேறொரு பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாணவனைக் கைது செய்த சிறுவர் மற்றும் மகளிர் பணியாக பொலிசார் மாணவனின் வீட்டை சோதனையிட்ட போது மாணவியின் தகாத புகைப்படங்கள் அடங்கிய மெமரி சிப் மற்றும் பென் டிரைவ் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் கைதான சந்தேகநபரான மாணவனை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.