உக்ரைன் அதிபரின் நேர்காணலையடுத்து ரஷ்ய ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
301

உக்ரைன்- ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக துருக்கியில் இரு நாடுகளுக்கும் இடையிலான 2-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது என உக்ரைன் அரச அதிகாரி டேவிட் அரகாமியா சமூக வலைதளம் ஊடாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கியில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் உக்ரைனின் முன்னுரிமைகள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பில் பேசப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உண்மையில் தாமதமின்றி நாங்கள் அமைதியை எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார். இதேவேளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் நேர்காணலை ஒளிபரப்புவதை, தவிர்க்குமாறு ரஷ்யாவின் தகவல் தொடர்பு கண்காணிப்பு அமைப்பு ரஷ்ய ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் போருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாக கூறி, ஜெர்மனியில் இருந்து வெளியாகும் பில்டு நாளிதழின் இணையத்தளத்திற்கு ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது.

இவ்வாறான நிலையில், கொரியா போல் உக்ரைனையும் இரண்டு துண்டுகளாகப் பிரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது என உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.