வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து அதிகமான வட்டி வீதத்தில் கடனை பெற தயாராகும் இலங்கை!

0
66

இலங்கை அபிவிருத்தி பிணை முறிகளை வெளியிட்டு மிக அதிகமான வட்டி வீதத்தில் டொலர்களை கடனாக பெற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கடனை வழங்குவோருக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளதுடன் இலங்கை மத்திய வங்கி இந்த கடனை பெறும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கான விரிவான பிரசாரங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆறு முதல் 57 மாதங்களில் திருப்பி செலுத்தும் வகையில் இந்த கடன் பெறப்படவுள்ளதுடன் எவ்வளவு தொகை கடனாக பெறப்பட உள்ளது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

வட்டி வீதமானது 8.5 வீதம் முதல் 8.95 வீதம் என்ற மட்டத்தில் இருப்பதுடன் மிக குறுகிய காலத்தில் கடனை திருப்பி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

7, 10,13,22,25, 34,46, 52, 57 மாதங்களில் இந்த கடனை திரும்ப செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து இந்த கடனை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.