ரஷ்ய உளவாளி என சந்தேகப்படும் ஒருவர் உக்ரைனில் கைது

0
63

உக்ரைன் மீதான ரஷ்ய போர்  நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதன்போது ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில்,உக்ரைனின் லிவிவ் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலை படம் பிடித்த ரஷ்ய உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உக்ரைனில் உள்ள லிவிவ் நகரம், நேற்று முன்தினம் ரஷ்யாவின் 2 ராக்கெட் தாக்குதலால் அதிர்ந்து போனது. இந்நிலையில் ஒரு ராக்கெட் பறந்து வந்து தாக்குவதைப் படம் பிடித்த ரஷ்ய உளவாளி என சந்தேகப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.