யாழில் வன்முறை கும்பலின் தாக்குதல்!

0
92

  யாழில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட வன்முறை கும்பல் வீடு புகுந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் யாழ்.மானிப்பாய் – சுதுமலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்.மானிப்பாய் – சுதுமலை தெற்கு இரும்பக்காரன் வீதியை சேர்ந்த சிவானந்தன் சஜிதரன் என்பவர் மீது நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.