யாழின் பிரமாண்ட கட்டிட திறப்பு விழா

0
73

இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் காணொளி தொழில் நுட்பத்தினூடாக எளிமையாக முறையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்தியாவின் 1.6 பில்லியன் நிதியுதவியின் கீழ் 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்துக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அனைத்து பணிகளும் நிறைவடைந்திருந்த நிலையில், பல்வேறு காரணிகளின் அடிப்படையில் திறப்பு விழாவிற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வந்தநிலையில் இன்று எளிமையாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண பண்பாட்டு மையம் வெகுவிமரிசையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த பண்பாட்டு மையம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.