மட்டக்களப்பில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்து தப்பியோடியுள்ள கொள்ளையர்கள்!

0
65

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மைலங்கரச்சி பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மைலங்கரச்சி பிரதேசத்தில் உள்ள பலசரக்கு கடையில் நேற்று இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

குறித்த பிரதேசத்திலுள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பெண் முதலாளியின் கழுத்தில் இருந்த 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான 2 அரைப் பவுண் நிறை கொண்ட தங்க சங்கிலியை அறுத்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.