பேரன்கள், மகன், மகள் என குடும்பமாக நடிகர் பாண்டியராஜன் எடுத்த அழகிய புகைப்படம்

0
107

நடிகர் பாண்டியராஜன் ஒரு நடிகராக நம் மனதில் நிலைத்து நிற்பவர். 

திரைப்பயணம்

நடிகராக அந்த முட்ட முட்ட கண்ணை உருட்டி உருட்டியே பல படங்களில் நடித்து மக்களிடம் ஸ்கோர் வாங்கிவிட்டார். இவர் இயக்குனராகவும தமிழ் சினிமாவில் கலக்கியுள்ளார். கன்னி ராசி படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த இவர் ஆண் பாவம், மனைவி ரெடி, நெத்தியடி, கபடி கபடி என 10 படங்களை இயக்கியிருக்கிறார்.

பாண்டியராஜன் அறிமுகப்படுத்திய பிரபலங்கள்

பாண்டியராஜன் அவர்கள் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்ததும் மற்ற கலைஞர்களையும் வளர்த்துள்ளார். அவர் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவாளர் நித்யா, நடிகர் மயில்சாமி, நடிகை சீதா போன்ற கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

பாண்டியராஜன் குடும்ப புகைப்படம்

1986ம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகருக்கு ப்ருத்வி, பல்லவா, பிரேம் என 3 மகன்கள் உள்ளனர். தற்போது பாண்டியராஜன் தனது மனைவி, மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,