பாடசாலை குடிநீர் கட்டணத்தை செலுத்தப்போகும் பெற்றோர்

0
63

யார் என்ன பேசினாலும் பாடசாலை குடிநீர் கட்டணத்தை பெற்றோர்களே செலுத்த வேண்டியுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்

பாடசாலை குடிநீர் கட்டணத்தை செலுத்துமாறு நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபை உத்தரவிட்டுள்ளதாகவும், ஆனால், இது குறித்து கல்வி அமைச்சகம் கண்டுகொள்ளவில்லை என்றும் ஸ்டாலின் கூறினார்.

அதற்கு மேல் கல்வி அமைச்சகம் எதுவும் அறிவிக்காததால், பாடசாலை கட்டணத்தை பெற்றோர்களே செலுத்த வேண்டியிருக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.

தற்போது பாடசாலை மூலம் மின்கட்டணம் செலுத்தப்படுவதாகவும், அதேபோன்று தண்ணீர் கட்டணத்தை மாணவர்களின் பெற்றோரிடம் வசூலித்து பாடசாலைதான் கட்டணம் செலுத்த வேண்டுமெனவும் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.