நாடாளுமன்றத்தில் நேரத்தை செலவிடுவது வீண் என பசில் ராஜபக்ச தெரிவிப்பு : நாடாளுமன்றத்தை மூடிவிடுவோமென ஐக்கிய மக்கள் சக்தி

0
67

நாடாளுமன்றத்துக்கு பசில் வந்தால், அது அவருடைய நேரத்தை வீணாக்கும் செயலாகும் என்று ஆளும் கட்சி குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் நிதியமைச்சர், நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் அது தொடர்பான விளக்கத்தை அளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்துள்ள ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில சாலிய எல்லவெல, பசில் நாடாளுமன்றத்துக்கு வந்தால் அது அவரின் நேரத்தை வீணடிக்கும் செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ச, தற்போதைய பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடவேண்டியுள்ளது.

எனவே அந்த நேரத்தை நாடாளுமன்றத்தில் செலவிடுவது, நேரத்தை வீணடிக்கும் செயலாகவே இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே உரிய நேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வருவார் என்றும் எல்லாவெல குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் நாடாளுமன்றம் வருவது நேரத்தை வீணடிக்கும் செயல் என்றால் நாடாளுமன்றத்தை மூடிவிடவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.