நடிகை குஷ்பூவின் தம்பியை பார்த்துள்ளீர்களா?

0
109

நடிகை குஷ்பூ

தமிழ் திரையுலகில் தனது நடிப்பினால் தனக்கென்று ஒரு இடத்தை சம்பாதித்து வைத்திருப்பவர் நடிகை குஷ்பூ.

இவர் நடிப்பில் வெளிவந்த சின்னத்தம்பி, அண்ணாமலை, நாட்டாமை, உள்ளிட்ட பல படங்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. மேலும், கடந்த வருடம் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மீரா எனும் சீரியலில் நடித்து வருகிறார்.

குஷ்பூவின் தம்பி

இந்நிலையில், நடிகை குஷ்பூவின் தம்பி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, குஷ்பு தம்பியின் பெயர் அப்துல்லா. இவரும் நடிகர் தான். 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மாய மோஹினி’ எனும் படத்தில் அப்துல்லா ஹீரோவாக நடித்திருந்தார்.

குஷ்பூ மற்றும் அப்துல்லா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..