தொகுப்பாளரை அறைந்துவிட்டு ஆஸ்கார் மேடையில் கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்!

0
110

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிரிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மனைவி பற்றி பேசியதால் கோபம்

நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஹேர் ஸ்டைல் பற்றி கிரிஸ் ராக் பேசியதால் தான் வில் ஸ்மித் கோபமாக மேடைக்கு ஏறி சென்று தொகுப்பாளர் கன்னத்தில் ஒரு பளார் விட்டார். அதன் பின் என் மனைவியின் பெயரை சொல்லாதே என கெட்ட வார்த்தையில் திட்டி சொன்னார் அவர்.

Alopecia என்ற நோயின் காரணமாகவே வில் ஸ்மித் மனைவி முடி இல்லாமல் இருக்கிறார். அதன் பிறகு வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். கிங் ரிச்சர்ட் என்ற படத்தில் நடித்ததற்காக அவர் விருது பெற்றார்.

மேடையில் உருக்கமாக மன்னிப்பு கேட்டார்

அதற்கு பிறகு மேடையில் பேசிய வில் ஸ்மித் “நான் அகாடமிக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். என்னுடைய சக nominee-களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இது ஒரு அழகான தருணம். நான் விருது வென்றதற்காக அழவில்லை. கிங் ரிச்சர்ட் குழுவினர் மற்றும் வீனஸ் – செரினா வில்லியம்ஸ் குடும்பத்துக்கு நன்றி.”

“நான் ஒரு crazy father போல இருக்கிறேன். காதல் உங்களை crazyயான விஷயங்களை செய்ய வைக்கும்” என தான் மேடையில் தொகுப்பாளரை அறைந்தது பற்றி கூறினார்.