சீன கடனை அடைக்க சீனாவிடமே கடன்! பெரும் நிதிச் சிக்கலில் இலங்கை அரசு

0
108

பெரும் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ள இலங்கை அரசு சீனாவின் கடனை அடைப்பதற்காக சீனாவிடமே மீண்டும் கடன் வாங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறத் திட்டமிட்டுள்ள இலங்கை, இந்தத் தொகையை ஏற்கனவே சீன வங்கிகளிடம் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிடமிருந்து இலங்கை பெற்றுள்ள வங்கிக் கடன்களும் இதேயளவு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கடன்களைத் திருப்பியளிப்பதற்கான தவணைகளை மாற்றியமைக்கும் திட்டங்கள் எதுவும் சீன நடைமுறைகளில் இல்லாததால் மறுகடன்கள் வாங்கப்படுவதாகத் தெரிகிறது.