கிளிநொச்சியில் ஆலய அபிவிருத்திக்காக 1.2 மில்லியன் நிதியுதவி!

0
97

கிளிநொச்சியில் உள்ள 11 இந்து ஆலயங்களிற்கு 1.2 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு ஆலயத்திற்கும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் பத்து ஆலயங்களிற்கும் இவ்வாறு நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் முயற்சியில் இந்து கலாச்சார அமைச்சின் நிதியிலிருந்து ஆலய அபிவிருத்திக்கான விசேட நிதி பெறப்பட்டு இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டது.

குறித்த நிதியினை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் நந்தகுமார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்.