உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

0
56

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,958 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

மேலும், வார இறுதியில் தங்கத்தின் விலையில் சிறிது சரிவு இருந்தாலும், கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலை சுமார் 3 சதவீதம் அதாவது 56 டொலரினால் உயர்ந்துள்ளது.

இதேவேளை, கடந்த ஒரு வருடத்தினுள் தங்க விலையின் அதிகாிப்பு 13 சதவீதம் அதாவது 230 டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 180,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாகும்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடும் சரிவை சந்தித்துள்ளமையே உள்நாட்டில் தங்கம் விலை உயர்வடைவதற்கு காரணம் என தங்க நகை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.