உக்ரைன் ரஷ்ய மோதல் ரஷ்யாவை சீனாவை நோக்கித் தள்ளக்கூடும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!

0
92

உக்ரைன் நெருக்கடி மற்றும் மேற்குலகத்தின் பதில்கள் ரஷ்யாவை சீனாவை நோக்கித் தள்ளக்கூடும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பாவுக்கு ஆபத்தான நிலைமையாக இந்த நடவடிக்கை மாறும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை பிரதானி ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.

டோஹா மன்றத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவ்வாறு செய்வது உலகளாவிய வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பாரிய பிளவை ஏற்படுத்தக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியு்ளளார்.

இதனால் அவ்வாறானதொரு நிலை தவிர்க்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நாம் தவிர்க்க முடியாமல் ரஷ்யாவை சீனாவிற்குள் தள்ள முடியும் என்பது நடந்து வரும் விடயங்களில் மோசமான விளைவுகளில் ஒன்றாகி விடும்.

தென்கிழக்கு மற்றும் வடமேற்கு இடையே உலகளாவிய பிளவை உருவாக்க முடியும் என என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதலாவதாக, அத்தகைய உலகளாவிய பிளவு ஏற்படுவதைத் தடுக்க உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்குலக நாடுகள் துரிதப்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.