இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

0
53

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் நாணய மாற்று விகிதங்களை மீறி நாணய மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடும் நாணய மாற்றாளர்களுக்கு (Money changers) எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதனை மீறி நாணய மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில், அவர்களின் அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களுக்கு புறம்பாக நாணய மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவது 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணி சட்டத்துக்கமைய தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.