இன்றைய ராசிபலன் {28 மார்ச் 2022}

0
104

மேஷம்

நேயர்களே தேவையற்ற அலைச்சல்கள் எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் உங்களுடைய தனித் திறமையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பேச்சில் சற்று பொறுமையுடன் இருந்தால் பலமான பலன்களை அடையலாம்.

தொழில்ரீதியாகச் சின்னச் சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் லாபகரமான பலன்களை அடைவீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது. கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி நிம்மதி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும் இருந்த உடல் பாதிப்புகள் எல்லாம் விலகி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள்.

ரிஷபம்

எதிலும் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டிய நாளாக இன்று நாள் உள்ளது. தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று தாமதமாக வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

உடனிருப்பவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக பார்க்கும்போது மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலைக்கு செல்பவர்கள் தங்களின் வேலையை கண்ணும் கருத்துமாக செயல்படுவது மிகவும் அவசியம் வீண் பழிச்சொல்லைச் சந்திக்க நேரிடும்.

மிதுனம்

பல்வேறு வகையில் அனுகூலங்கள் கிடைக்கக் கூடிய நாளாக இருக்கும். இன்று 2.10 மணி முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் துவங்க உள்ளது. அதனால் எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் சாதகமாக இருந்தாலும் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.

அதிகாரிகளுடன் பேசும்போது பேச்சில் சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வதாலும் வேலையில் ஏற்படும் சிறிய பிரச்சினைகள் கூட சமாளித்து வெற்றியடையலாம். தொழில் ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்க பொறுமை மிகவும் அவசியம். எதிலும் கவனமாக இருப்பதும், தொலைதூரப் பயணங்கள் தவிர்ப்பதும் அவசியம்.

கடகம் 

எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். மிகவும் சிறப்பாகக் கிடைக்கும் தொழில் ரீதியாக மிகவும் லாபகரமான பலனை பெறுவீர்கள். கடந்தகாலப் பிரச்சினைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் விலகி ஓடும் உங்களுக்கு இருந்த மறைமுக பிரச்னைகள் எல்லாம் குறையக் கூடிய வாய்ப்பு உள்ளது.

தொழில் ரீதியாக பார்க்கும்போது புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். வேலைக்கு செல்பவர்கள் அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். இன்றைய நாளில் இருக்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள் குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மிக சிறப்பாக நடைபெற வாய்ப்புள்ளது. கும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய ஒரு இனிய நாளாக இன்று இருக்கும். பணவரவுகள் மிக மிக சிறப்பாக இருக்கும் கொடுத்த வாக்குறுதிகள் எளிதாக காப்பாற்றக்கூடிய யோகமான நாள் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் லாபகரமான பலன்களே அடையக்கூடிய அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

வேலைக்கு செல்பவர்கள் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த உத்தியோக உயர்வு இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படக்கூடிய இனிய நாளாக இன்று இருக்கும்.

கன்னி

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனுகூலமான பலனை தரலாம். தொழில் ரீதியாக பார்க்கும்போது புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி நலம் உண்டாகும். வேலைக்கு செல்பவர்கள் அதிகாரிகளின் ஆதரவு மிகவும் சிறப்பாக இருக்கும்.

நண்பர்கள் மூலமாக ஒரு சில மனோ கோலங்கள் அடைவீர்கள். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மிகவும் சிறப்பாக நடந்து முடிய கூடிய சிறப்பான நாளாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் நவீன கரமான பொருட்கள் வாங்கக் கூடிய நல்ல நாளாக இருக்கும்.

துலாம் 

தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாகலாம். பணவரவில் இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது தொழில் ரீதியாகப் பார்க்கும். போது முடிந்தவரைச் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

புதிய நபருடன் பழகும் போதும் சற்று நிதானத்துடன் செயல்படுவது மிகவும் நல்லது வேலைக்கு செல்பவர்களுக்கு சற்று வேலை பளு அதிகமாக இருக்கும் மற்றவர்களின் வேலை கூட நீங்களே செய்ய வேண்டிய நிலைமை ஏற்படலாம். சிலருக்கு தேவையற்ற பயணங்கள் ஏற்படலாம் உணவகத்தில் சற்று கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியம்.

விருச்சிகம்

நேயர்களே எல்லா வகையிலும் ஏற்றம் அடையக்கூடிய நாளாக இன்று இருக்கும். எதிர்பார்த்த பண உதவி தக்க சமயத்தில் கிடைக்கும் உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் கூடிய அதிர்ஷ்ட நாளாக கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

தொழிலில் பார்க்கின்றபோது எந்த எதிர்ப்பையும் சமாளிக்க கூடிய பலமான பலன்கள் ஏற்படும். வேலைக்கு செல்பவர்கள் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால் கடினமான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது சற்று கவனமாக செல்வது நல்லது.

தனுசு

எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபகரமான பலன் இன்று இன்று கிடைக்கும். தொழில் இலாபகரமான பலனை அடைவீர்கள்.

வேலைக்கு செல்பவர்கள் சக நண்பர்களின் உதவி சிறப்பாக இருக்கும் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் இல்லை அனுகூலங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கி நிம்மதி ஏற்படும். உறவினர்கள் மூலமாக நெருக்கடிகள் விலகி அனுகூலம் ஏற்படும்.

மகரம் 

உங்களுடைய வளமும் வலிமையும் கூட கூடிய நாளாக இன்று நாள் இருக்கும் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

தொழில் ரீதியாக புதிய உத்திகளைப் பயன்படுத்தி ஒரு வளமான பலன்களை அடைவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு யோகமான நாள் இன்று. நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நீண்ட நாட்களாக இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் குறையக் கூடிய நாளாக இருக்கும்.

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சற்று விட்டுக்கொடுத்துச் செல்வது மிகவும் நல்லது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதால் மேன்மையான பலன்களை பெறலாம்.

கும்பம்

உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எளிதில் முடியக்கூடிய வேலைகளுக்கு கூட சற்று கால தாமதம் ஆகலாம். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்ளவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம் தொழிலில் இருப்பவர்கள் வேலையாட்களை சற்று அனுசரித்து செல்லவும்.

ஒரு சிலர் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். உடன் இருப்பவர்களிடம் பேசும்போது சற்று நிதானத்துடன் செயல்படவும். வேலைக்கு செல்பவர்கள் உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட கால தாமதம் ஆகலாம் என்பதால் மன சஞ்சலம் ஏற்படலாம். மற்றவர்களின் வேலை நீங்களே செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.

மீனம்

மக்களுக்கு பல்வேறு வகையில் வளமான பலன் ஏற்படக் கூடிய நாடாகும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும் தொழில் ரீதியாக லாபகரமான பலனை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

நண்பர்கள் மூலமாக ஒருசில அனுகூல பலன்கள் ஏற்படும். வேலைக்கு செல்பவர்கள் அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்பதால் ஒரு வளமான பலனை அடையக்கூடிய வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள் நீண்டகால நெருக்கடிகள் விலகும் நிம்மதி பெருகும்.