5 மொழிகளில் வெளியாகிய கே.ஜி.எஃப். – 2 திரைப்படம்: தமிழ் ட்ரெய்லரை வெளியிட்ட சூர்யா

0
95

ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.ஜி.எஃப். – 2 படத்தில் ட்ரெய்லர் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழ் ட்ரெய்லரை சூர்யா வெளியிட்டுள்ளார்.

யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எஃப். 2 படம் உருவாகியுள்ளது. 2018-ல் வெளியான இதன் முதல்பாகம், மொழி, மாநில எல்லைகள் கடந்து இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.

இதனால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளியீட்டை படக்குழுவினர் தள்ளிவைத்தனர்.

ஏப்ரல் 14-ம் தேதி கே.ஜி.எஃப். 2 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 6.40 மணியளவில் படத்தின் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளுக்கான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழில் ட்ரெய்லரை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.