‘ வணங்காமண்’ கப்பலின் பெயரிலேயே மற்றுமொரு செயல் திட்டத்தை முன்னெடுக்கவுள்ள தமிழர் செயலகம்!

0
296

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை உடனடியாக வழங்க சிங்கள இனவெறி அரசால் திருப்பி அனுப்பப்பட்ட ‘ வணங்காமண்’ கப்பலின் பெயரிலேயே மற்றுமொரு செயல் திட்டத்தை அனைத்துலகத் தமிழர் செயலகம் முன்னெடுக்க உள்ளது.

2009 மே மாதம் 7ஆம் நாள் ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஈழத்தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட திட்டமிட்ட இன அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிதித் திரட்டி, 6 கோடி ரூபாய் மதிப்பிலான 887 டன் நிவராணப் பொருள்களை 27 கன்டெய்னரில் யாருக்கும் வணங்காத அந்த மண்ணுக்கு ‘வணங்காமண்’ என பெயரிட்ட கப்பலில் அனுப்பி வைத்தனர்.

இன அழிப்புப் போரில் வதைப்பட்ட தமிழ் மக்களுக்கு அனுப்பப்பட்ட உணவுப்பொருள்களை சிறிதும் மனிதாபிமானமின்றி சர்வதேச கடல் எல்லையிலேயே தடுத்து நிறுத்தியது சிங்கள இனவெறி அரசாங்கம்.

அதுமட்டுமின்றி, அக்கப்பலை திருப்ப அனுப்பியது. பின்னர், தமிழ்நாட்டு துறைமுகத்தில் வேறு ஒரு கப்பலுக்கு அந்த உணவுப்பொருள்கள் மாற்றப்பட்டன.

ஏறத்தாழ 5 மாதங்களுக்கு மேலாக திட்டமிட்டு சிங்கள இனவெறி அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்ட உணவுப்பொருள்கள் மற்றொரு கப்பலில் மாற்றப்பட்டு மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அவற்றுக்கு 20 இலட்சம் வரியை இட்டது இலங்கை சிங்கள இனவெறி அரசாங்கம். இனப்படுகொலை போரில் கொடூரத் தாக்குதல்களுக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு குடிக்க நீர் கூட கிடைக்கக் கூடாது என்ற சிங்களப்பேரினவாத வெறி என்று தான் இதனை நாம் கருத வேண்டும்.

தமிழர்களுக்கு எதிரான இனவெறியை ஊட்டி, சிங்களப் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று இன்று அந்த சிங்கள மக்களையே நடுரோட்டிற்கு கொண்டுவந்துள்ளது. கடந்த 2006-2009 தமிழின அழிப்புக்கு பிறகு தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு அவர்களை குறிப்பிட்டு,

‘அவரிடம் ஈழத்தை தந்திருந்தால் இன்று நாங்கள் சோற்றுக்காக ரோட்டிற்கு வந்து நின்றிருக்க மாட்டோம்’ என சிங்கள மக்களே வருந்துகின்றேன்.

2004 ஆழிப்பேரலை பேரிடர் காலத்தில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள் என இனமொழி வேறுபாடின்றி இரு தேசிய இன மக்களுக்கும் உழைத்திட்ட அம் மாபெரும் விடுதலை இயக்கத்தைப் போற்றும் நமக்கும் அவர்கள் வழி நடப்பது தான் முதற்பணியும் கூட.

இந்த நேரத்தில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை உடனடியாக வழங்க சிங்கள இனவெறி அரசால் திருப்பி அனுப்பப்பட்ட ‘ வணங்காமண்’ கப்பலின் பெயரிலேயே மற்றுமொரு செயல் திட்டத்தை அனைத்துலகத் தமிழர் செயலகம் முன்னெடுக்க உள்ளது.