மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருளின் விலை!

0
89

சிலோன் இந்தியன் எண்ணெய் நிறுவனம் தனது விற்பனை நிலையங்களில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு ஏற்ப தாமும் எரிபொருள் விலையை உயர்த்துவது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் விலையை விட தற்போது பெற்றோல் லீற்றருக்கு ரூ.50 குறைவாக சிபெட்கோ விற்பனை செய்வதே இதற்குக் காரணம்.

இதனால் அதிகளவான பெற்றோல் பாவனையாளர்கள் சிபெட்கோ நோக்கி இழுக்கப்படுவதால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

தற்போது நாட்டிலுள்ள அனைத்து பெற்றோல் நுகர்வோருக்கும் பெற்றோல் வழங்கும் திறன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு இல்லை. இந்தியன் எண்ணெய் நிறுவனத்தில் எரிபொருள் வாங்குபவர்கள் அனைவரும் சிபெட்கோ மீது ஈர்க்கப்பட்டால், சிபிசிக்கு மேலும் நெருக்கடி ஏற்படும்.

விரைவில் எண்ணெய் விலையை சமன் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் விலையை அதிகரிக்கும் நோக்கம் இல்லையென எரிசக்திஅமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.