அரச தலைவர் கோத்தபாய விட்கும் தமிழ் தேசிய கூடமைப்பினருக்கும் இடையில் நேற்று நடந்த சந்திப்பு சுமுகமாக முடிந்தது.காணி விடுவிப்பு ,அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடைச்ச சட்ட திருத்தம், காணாமல் போனோர் விவகாரம் ,புதிய அரசமைப்பு போன்றன குறித்து இரு தரப்பினரிடையேயும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த நாட்டை கட்டியெழுப்ப எல்லோரும் ஒன்று படுவோமென அரச தலைவர் சந்திப்பின் தொடக்கத்திலேயே கூறினார்.

இந்த நாட்டின் தலைவர் என்ற முறையில் அனைத்து குடிமக்கள் குறித்தும் சமமான அக்கறை செலுத்துவேன் எனவும் கோத்தபாய கூறினார்.