சிலாபத்தில் கடலுக்குள் மூழ்கி இருவர் பலி!

0
64

சிலாபம் மெவத்தை கடலில் நடந்த விருந்து ஒன்றில் கலந்துக்கொண்ட ஒன்பது பேர் கடலுக்கு குளிக்க சென்ற போது, அவர்களில் இரண்டு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. இவர்கள் கடலில் மூழ்கும் போது அதனை கண்ட மீனவர்கள் ஒருவரை மீட்டுள்ளதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டம் நானு ஓயாவை சேர்ந்த மருதை ராமசாமி, விஸ்வநாதன் ஆகியோரை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் தலா நான்கு பிள்ளைகளின் தந்தையர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் தும்மலசூரிய கைத்தொழில் பேட்டையில் இருந்து மெவத்தை பகுதிக்கு விருந்துக்கு வந்துள்ளனர்.