எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை வெப்பத்துடனான வானிலை தொடரக்கூடும்;வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

0
76

நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை தொடரக்கூடும் எனவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சூரியம் உச்சம் கொடுக்கும் என அவர் கூறியுள்ளார்.

அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய சுகாதார பிரிச்சினைகளை தவிர்த்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.