இரத்மலானை சர்வதேச விமானநிலையத்தில் விமான போக்குவரத்து இன்று ஆரம்பம்!

0
134

55 ஆண்டுகளுக்கு பின்னர் கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் நேரடி அட்டவணைக்கு அமைய சர்வதேச விமான போக்குவரத்து இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மாலைதீவில் இருந்த வந்த விமானம் இன்று காலை 8.47 மணியளவில் இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இன்று முதல் இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பயணங்களை ஆரம்பிக்கும் விமான நிறுவனங்களிடம் அறவிடப்படும் 60 அமெரிக்க டொலர் வரியில் 30 டொலர்கள் மாத்திரமே அறவிடப்படும்.

அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியாவுக்கான சர்வதேச விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை உட்பட 60 நாடுகளுக்கு விமான சேவைகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது. கோவிட் தொற்று நோய் காரணமாக அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் இந்தியா கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுத்தியது.