விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் முன்னாள் அமைச்சர் உட்பட நால்வர் கைது!

0
418

யானை முத்துக்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முயற்சித்த முன்னாள் அமைச்சர் உட்பட நால்வர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை பிரதேசத்தில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது முன்னாள் அமைச்சரும், கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பண்டு பண்டாராநாயக்கவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கோடி ரூபா பெறுமதியான முத்துக்கள் இவ்வாறு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பாடசாலை ஆசிரியை ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலனாய்வுத் தகவலுக்கு அமைய முன்னாள் அமைச்சர் பயணம் செய்த வாகனத்தை சோதனையிட்ட போது இந்த முத்துக்கள் ஆசிரியையிடமிருந்து விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

மேலும், வாகனத்திலிருந்து கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

பண்டு பண்டாரநாயக்க மத விவகார அமைச்சராகவும், சுற்றாடல் தொடர்பான ராஜாங்க அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.