சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பிரபல நடிகை; கணவர் திடுக்கிடும் வாக்குமூலம்!

0
321

பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷமுவை தவறான உறவு காரணமாக பிரபல நடிகையை அவரது கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 நடிகை ரைமா இஸ்லாம் ஷமு 

வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷமு 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளதுடன் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் திடீரென காணாமல் போனார். இதையடுத்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் சாக்கு மூட்டையில் நடிகை சடலமாக மீட்கப்பட்டார்.

நடிகை உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணையில் நடிகை ரைமா இஸ்லாமுக்கும், தனியார் தொலைக்காட்சி அதிகாரிக்கும் நீண்ட நாட்களாக உறவு இருந்து வந்துள்ளது. நடிகையின் கணவர் ஷகாவத் அலி மனைவியைப் பலமுறை கண்டித்ததாகவும், எனினும் அவர் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி அதிகாரியுடனஅ பழகி வந்ததாகவும் கூறப்படுகின்றது .

இதனால் ஆத்திரமடைந்த ஷகாவத் அலி மனைவியை வெட்டி கொலை செய்து அவரது உடலைச் சாக்கு மூட்டையில் அடைத்து வீசிவிட்டு தலைமறைவானது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிஸார் ஷகாவத் அலியை சிறையில் அடைத்ததுடன், இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.